வங்கிகளில் 32 ஆயிரம் கோடி மோசடி - இந்தியாவையே அதிர வைத்துள்ள உண்மை!

செப்டம்பர் 10, 2019 516

புதுடெல்லி (10 செப் 2019): 18 வங்கிகள் 32 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளதாக ஆர்.டி.ஐ. மூலம் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரசேகர் கவுர் என்ற சமூகச் செயற்பாட்டாளர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு கிடைத்துள்ள பதில் இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் மொத்தம் 18 பொதுத்துறை வங்கிகளில் வங்கிக்கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக, மொத்தம் 2,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 31,898.63 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே வாராக்கடன்களால் வங்கித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடி, விஜய் மல்லையா, ஐசிஐசிஐ சாந்தா கோச்சார் போன்றவர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடிகளில் ஈடுபட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில்தான் அதிகபட்சமாக 38% அளவுக்கு பண மோசடி நடந்துள்ளது. இந்த வங்கி சார்பாக மட்டும் ரூ.12,012.77 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக மொத்தம் 1,197 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அடுத்ததாக அலகாபாத் வங்கி சார்பாக ரூ.2,855.46 கோடி மதிப்பில் மோசடி நடந்துள்ளது. 381 மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பாக ரூ.2,526.55 கோடி அளவிலான 99 மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

பாங்க் ஆஃப் பரோடா வங்கி சார்பாக ரூ.2,297.05 கோடிக்கு 75 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் சார்பாக 45 வழக்குகளும், கனரா வங்கி சார்பாக 69 வழக்குகளும், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா சார்பாக 194 வழக்குகளும்,யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பாக 31 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...