அடித்துக் கொல்லப் பட்ட தபரேஸ் அன்சாரியின் மரணம் குறித்து வெளியாகியுள்ள பகீர் தகவல்!

செப்டம்பர் 10, 2019 679

ராஞ்சி (10 செப் 2019): ஜார்கண்டில் ஜெய்ஸ்ரீராம் எனக் கூற வலியுறுத்தி அடித்துக் கொலை செய்யப்பட்ட தப்ரேஸ் அனசாரி, மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தபரேஸ் அன்சாரி என்ற 24 வயது இளைஞர் ஜெய் ஸ்ரீராம் என்று கூறச்சொல்லி வன்முறை கும்பலால் கொடூரமாக தாக்கப் படார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தப்ரஸ் அன்சாரி 4 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி பலியானார்.

ஒரு கும்பல் அவரைத் தாக்கும் விடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய 11 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தப்ரஸின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் கொலை வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பல மணி நேரம் அடித்துத் துன்புறுத்தப்பட்ட தப்ரஸ் அன்சாரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார். ஆனால், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட 11 பேர் மீதான கொலை வழக்கும் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தபரேஸ் அன்சாரியின் மரணம் குறித்து வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...