ஐயப்ப கோவிலில் மனித மலம் வீசி மத கலவரத்தை தூண்ட முயன்றவர் கைது!

செப்டம்பர் 10, 2019 477

திருவனந்தபுரம் (10 செப் 2019): ஐயப்ப கோவிலில் மனித மலம் வீசி மத உணர்வை புண்படுத்தியது தொடர்பாக ராமகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் கேரள மாநிலம் வலஞ்சேரி ஐயப்ப கோவிலை சேதப் படுத்தியதோடு, மனித மலம் வீசப்பட்டு கலவரம் மூளும் நிலை ஏற்பட்டது. இதனை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.

இந்நிலையில் இதுதொடர்பான விசாரணையில் மத கலவரத்தை தூண்டும் விதமாக வடகம்பூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (50) என்பவரே இச்செயலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

ராமகிருஷ்ணன் உள்ளூர் பாஜக பிரமுகரின் தம்பியின் நண்பர் என கூறப்படுகிறது. இதனை அடுத்து பாஜக பிரமுகரும் போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...