ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் காவல்!

செப்டம்பர் 11, 2019 354

ஆந்திரா (11 செப் 2019): ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு தெலுங்கு தேசம் கட்சியினர் மீது தாக்குதல் உள்ளிட்ட அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு இன்று (புதன்கிழமை) பேரணி நடத்த தெலுங்குதேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் வீட்டுக் காவலில் வைத்து ஜெகன்மோகன் ரெட்டி அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் தெலுங்கு தேசம் கட்சியின் பிற தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...