சந்திரயான் 2 விவகாரம் - மகிழ்ச்சியில் இஸ்ரோ!

செப்டம்பர் 12, 2019 422

புதுடெல்லி (12 செப் 2019): சந்திரயான் 2 வை கண்டு பிடிக்கும் முயற்சியில் நாஸாவும் கைகோர்த்துள்ளதால் இஸ்ரோ மகிழ்ச்சியில் உள்ளது.

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி இஸ்ரோவுன் தகவல் தொடர்பு இல்லாமல் இருக்கும் விக்ரம் லேண்டரை. இஸ்ரோ உயிர்பிக்கும் வேலையில் இருக்கின்றது.இந்நிலையில், மிகவும் சக்திவாய்ந்த ஏன்டனாக்களை வைத்துள்ள நாசா விக்ரமுக்கு ஹலோ என்று மெஸ்சேஞ் அனுப்பியுள்ளது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் குஷியில் உள்ளனர்.

நிலவின் தென் துருவம்: இதுவரை எந்த நாடும் நிலவின் தென்துருத்திற்கு விண்வெளி ஆய்வுகலன்களை அனுப்பவில்லை. இஸ்ரோ வெற்றிகரமாக சந்திராயன்-2 விண்கலன் மூலம் ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டத்தில் நிலை நிறுத்தியிருந்தது. மேலும், நிலவு தரையிருந்து 2.1 கி.மீ முன் எதிர்பாரதவிதமாக விக்ரம் லேண்டர் உடனாக தொடர்பை இழந்தது இஸ்ரோ

நிலவின் வேகமாகவும் தரையிறங்கியிருந்த லேண்டரை ஆர்பிட்டர் தெர்மல் இம்மேஜ் மூலம் கண்டுபிடித்தது இஸ்ரோ. அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் வேலையிலும் ஈடுபட்டு வருகின்றது. லேண்டரில் உள்ள அவசர கால கருவிகள், ரோவர் இயக்க வேகமாகவும் செயல்பட்டு வருகின்றது.

அதில் பொறுத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் மூலம் லேண்டருக்கு சார்ஜிங் ஏறி வருகின்றது. மேலும், சேமடையாமல் இருக்கும் லேண்டர் சாய்த நிலையில் இருக்கின்றது. அதில் உள்ள ஏன்டனாக்கல் ஆர்பிட்டரை பார்த்தபடி இருந்தால், உடனடியாக தகவல் தொடர்பை கொள்ள முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த 7ம் தேதி நிலவில் மான்சினஸ்-சி, சிம்பலீலியஸ்-என் ஆகிய 2 பள்ளங்களுக்கு இடையே தரையிறங்கி உள்ளது. அது சூரிய வெளிச்சம் குறைவாக உள்ள பகுதியாகும். தற்போது, 6 நாட்களை கடந்துள்ளது. மீதி இன்னியும் 8 நாட்கள் தான் இருக்கின்றது. லேண்டரை உயிர்பிக்க இஸ்ரோ மும்முரமாக போராடி வருகின்றது.

இந்நிலையில் சக்திவாய்ந்த தனது ஏன்டானாக்களை பயன்படுத்தி அசைவற்ற நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டருக்கு நாசா ஹலோ என்று சமிக்கையை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் கலிபோனர்னியா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து, அதிர்வெண்ணை அனுப்பியுள்ளது.

விக்ரம் லேண்டருக்கு இந்த ஹெர்ட்ஸ் ஹலோ மெஸ்சேஞ் அனுப்பட்டது. (எர்த் மூன் எர்த்) வழியாக அனுப்பட்ட போது, சமிக்கை சற்று வித்தியாசமாகவும் இருந்துள்ளது.

விக்ரம் லேண்டருக்கு சமிக்கை அனுப்பட்ட போது, வானில் இருந்து 8,00,000 கி.மீ சுற்று பயணத்திற்கு பிறகு, பூமிக்கு ஒரு சிறிய பகுதியை அனுப்பியுள்ளது. இது விக்ரம் லேண்டரிமிருந்து வந்ததா இல்லை சந்திரனில் பிரதிபலிப்பா என்றும் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நாசா சந்திராயன்-2 விஷயத்தில் ஏன் அக்கரை காட்ட வேண்டும் என்றால், நிலவின் தென்துவருவத்திற்கு நாசா மனிதர்களை முதல் முறையாக அனுப்ப இருக்கின்றது. இதற்காக சந்திராயன்-2 திட்டத்தையும் தனக்கு சாதகமாக்கி பயன்படுத்தி வருகின்றது.

நாசாவின் ஜேபிஎல் கோல்ட்ஸ்டோன், தெற்கு கலிபோர்னியா (யுஎஸ்), மாட்ரிட் (ஸ்பெயின்) மற்றும் கான்பெர்ரா (ஆஸ்திரேலியா) ஆகிய மூன்று இடங்களில் டிஎஸ்என் தரை நிலையத்தைக் கொண்டுள்ளது. இங்கு இருந்து தொடர்ச்சியாகவும் சமிக்கைகளை அனுப்பி வருகின்றது.

பூமியில் 120 டிகிரி இடைவெளியில் அமைந்துள்ளன. ஒவ்வொரு தளமும் குறைந்தபட்சம் நான்கு பெரிய ஆண்டெனாக்களைக் கொண்டுள்ளது - 26 மீட்டர் முதல் 70 மீட்டர் வரை விட்டம் வரை - ஒரே நேரத்தில் பல விண்கலங்களுடன் தொடர்ச்சியான வானொலி தகவல்தொடர்புகளை வழங்கும் திறன் கொண்டது.

2005 ஆம் ஆண்டில் தொலைந்து போன ஒரு நாசா உளவு செயற்கைக்கோள் IMAGE ஐக் கண்டறிந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. இந்த விஷயத்தில் நாசாவும் கூட்டு சேர்ந்து, விக்ரம் லேண்டரை உயிர்பிக்கும் வேலையில் இருப்பதால், இஸ்ரோ விஞ்ஞானிகளும் குஷியடைந்துள்ளன

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...