சாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்டக்கல்லூரி மாணவி பரபரப்பு தகவல்!

செப்டம்பர் 13, 2019 525

புதுடெல்லி (13 செப் 2019): பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் மீது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், அவரது லீலைகள் வீடியோக்களை விரைவில் வெளியிடுவேன் என்று மாணவி தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவர் சாமியார் சின்மயானந்த். 73 வயதான இவர் பல ஆசிரமங்களையும் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவர் மீது அவர் நடத்தும் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

பாலியல் தொல்லை குறித்து அந்தப் பெண்ணின் தந்தை போலீஸில் புகார் கொடுத்திருந்தார். சின்மயானந்தும் மேலும் சிலரும் தனது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் பகிரங்கமாக புகாரளித்திருந்தார்.

இதுகுறித்து அந்த பெண் செய்தியாளர்களிடம் கூறும்போது, சின்மயானந்த் என்னை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தினார். அதன்பிறகும் கூட ஒருவருடமாக தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். சிறப்பு புலனாய்வுக் குழு என்னிடம் பல மணி நேரம் விசாரித்தனர். அப்போது சின்மயானந்த் குறித்தும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தேன். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

என்னுடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது, அவரை அங்குள்ள போலீஸார் மிரட்டியுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் இந்திரா விக்ரம் சிங்கிடம் இருந்தும் மிரட்டல் வந்துள்ளது.

நான் தங்கியிருந்த விடுதி அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. என் அறையை ஊடகங்கள் முன்பு திறக்கவேண்டும். என்னிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவேன் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே சின்மயானந்திடம் நேற்று மாலை 6:20 மணிக்கு தொடங்கி அதிகாலை 1 மணி வரை போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...