ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதிரடி முடிவு!

செப்டம்பர் 13, 2019 1224

புதுடெல்லி (13 செப் 2019): காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் விவகாரத்தில் மத்திய அரசை ஆதரிப்பதாக ஜமியத்துல் உலமா ஹிந்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜமியத்துல் உலமா ஹிந்த் முஹம்மது மதானி மற்றும் மவுலானா அர்ஷத் மதானி உள்ளிட்டோர் மோகன் பகவத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்துப் பேசிய பின்பு மத்திய பாஜக அரசு காஷ்மீர் மற்றும், அஸ்ஸாம் விவகாரங்களில் எடுத்துள்ள முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாட்டின் குடியுரிமை விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவிற்கும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370 ஐ நீக்கியது குறித்தும் மத்திய அரசுக்கு முழுமையான ஆதரவை இவர்கள் அளித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...