பாஜக தலைவர் கொடூர கொலை!

செப்டம்பர் 14, 2019 639

பாட்னா (14 செப் 2019): பீகாரில் பாஜக தலைவர் மாவோயிஸ்டுகளால் கொடூரமாக கொலை செய்யப் பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டம் சத்கார்வா கிராமத்தை சேர்ந்தவர் பாஜக மாவட்ட தலைவர் தினேஷ் கோடா. இவரை சத்கார்வா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் கழுத்தை அறுத்து கொலை செய்தாக கூறப்படுகிறது.

மேலும் அவர் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் சில துண்டு பிரசுரங்களையும் மாவோயிஸ்டுகள் விட்டுச் சென்றனர்.

அதில், தினேஷ் கோடா போலீஸ் உளவாளியாக செயல்பட்டதாகவும், தங்கள் பெயரில் மக்களிடம் வரி வசூலித்து வந்ததாகவும் மாவோயிஸ்டுகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...