முன்னாள் சபாநாயகர் தற்கொலை!

செப்டம்பர் 16, 2019 347

ஐதராபாத் (16 செப் 2019): ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் கோடலா சிவபிரசாத் ராவ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆந்திரா பிரிக்கப்பட்ட போது ஐதராபாத்தில் ஆந்திர சட்டசபை கட்டிடத்தில் இருந்த பொருட்களை அமராவதி சட்டசபை கட்டிடத்திற்கு மாற்றும் போது ஏராளமான பர்னிச்சர் பொருட்கள் மாயமானதாக புகார் எழுந்தது.

புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி இதுதொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். அப்போது பர்னிச்சர் பொருட்களை அப்போதைய சபாநாயகர் கோடலா சிவபிரசாத் தனது வீட்டுக்கு அனுப்பியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் நான் அந்த பொருட்களை திருடவில்லை. தற்காலிக வளாகத்தில் வைத்தால் அவை சேதமடையும் எனக்கருதி எனது வீட்டுக்கு அனுப்பி வைத்தேன் என அவர் விளக்கம் அளித்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் கோடலா சிவபிரசாத் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோடலா சிவபிரசாத் ஆந்திராவின் மூத்த தலைவர்களில் ஒருவர். மேலும் என்.டி.ராமாராவ் தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். அவரது தற்கொலை ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...