இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொலை!

செப்டம்பர் 16, 2019 491

முஸப்பர் நகர் (16 செப் 2019): இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினரை பெண்ணின் தந்தையும் மகனும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர் நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் பங்கஜ். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றிவரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்

அந்த பெண் தனது வீட்டில் பங்கஜ் பற்றி கூற, சனிக்கிழமை மாலை பெண்ணின் தந்தை மற்றும் மகன் இணைந்து அவரை கொலை செய்துள்ளனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...