இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்!

செப்டம்பர் 17, 2019 225

புதுடெல்லி (17 செப் 2019): சவூதியில் இரண்டு எண்ணெய் ஆலைகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப் பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

சவுதி அரேபியா எண்ணெய் கிடங்குகளில் நடத்தப் பட்ட ட்ரோன் தாக்குதல் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் விலை ஓரே நாளில் 19.5 சதவீதம் உயர்ந்து மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்தத் தாக்குதலால் இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் அளவு பாதிக்கப்படும் நிலையில் இருந்த போது சவுதி இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் சரியான வகையில் விநியோகம் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...