இந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு!

செப்டம்பர் 17, 2019 254

புதுடெல்லி (17 செப் 2019): நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, இந்தியாவில் தமிழ், இந்தி, கன்னடம், மராத்தி, ஆங்கிலம், உருது என பல மொழிகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், பன்மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிக்க நினைப்பதாகவும், தமிழை அழிக்க நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...