இருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது!

செப்டம்பர் 17, 2019 453

லக்னோ (17 செப் 2019): சக மாணவிகள் பேசாமல் புறக்கணித்ததால் அந்த வேதனையில் மாணவி ஒருவர் தற்கொலைசெய்து கொண்ட சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படுக்கும் 11 -ம் வகுப்பு மாணவி ஒருவர் சக மாணவிகள் பேசாததால் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த விசாரணையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில்,அந்த சம்பவம் நடந்து 3 வருடம் ஆகிவிட்டபோது தற்போதும் தான் தண்டிக்கப்படுவதாக கூறியிருந்தார். தன்னை நேசித்தவர்கள் கூட தன்னிடமிருந்து விலகிவிட்டதாகவும் சக தோழிகள் நம்பாவிட்டால் எப்படி நான் மேற்படிப்பு வரை அவர்களுடன் படிக்க முடியும் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் அந்த மாணவி.

இந்த கடிதத்தை படித்தபின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 3 வருடங்களுக்கு முன்பு இன்னொரு மாணவியின் உணவை இவர் சாப்பிட்டு உள்ளார். அதற்கு சீனியர் மாணவிகள் 48 பேர் ஒன்றாக சேர்ந்து ஜூனியர் மாணவியை அடித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்குபிறகு அந்த மாணவியிடம் யாரும் பேசவில்லை என கூறப்படுகிறது. வகுப்பில் சக மாணவிகளின் புறக்கணிப்பால் 11 -ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...