முஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

செப்டம்பர் 17, 2019 472

அலிகார் (17 செப் 2019): உத்திர பிரதேசம் அலிகாரில் முஸ்லிம் குடும்பத்தினர் 6 பேர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

அலிகார் ரெயில்வே நிலையத்தில் வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கன்னாவுஜ் பகுதியை சேர்ந்த அஃப்சானா பேகம் குடும்பத்தினர் ஆறுபேர் அலிகார் ரெயில்வே நிலையத்தில் ரெயில் ஏறும்போது அவர்கள் ஏறிய ரெயில் பெட்டிக்குள் மற்றொரு கும்பலும் ஏறியதாகவும் அவர்களே இந்த தாக்குதல் மேற்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போதிலும் இதுவரை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்க்கோரி, அலிகார் பல்கலை கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

காயம் அடைந்த 6 பேர் ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...