மோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் நிறுவனம்?

செப்டம்பர் 17, 2019 514

சியாட்டில் (17 செப் 2019): பிரதமர் மோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பில்லியனரான பில்கேட்ஸின் நிறுவனம் விருது வழங்கி கௌரவிக்க உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டுவந்தது. இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக்கொடுக்கப்பட்டது. பல இடங்களில் பொதுக்கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. திடக் கழிவு மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல ஆயிரம் பேர் மோடிக்கு எதிராகவும் பில்கேட்ஸ் ஃபவுண்டேஷனுக்கு எதிராகவும் காஷ்மீருக்கு ஆதரவான டீ ஷர்ட் அணிந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மேலும் மோடிக்கு கவுரவம் கூடாது என்று ஒரு லட்சத்திற்கும் மேலான புகார்கள் அளிக்கப் பட்டன. எனினும் விருது வழங்குவதை திரும்பப் பெறப்போவதில்லை என்று பில்கேட்ஸ் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

மேலும் அளிக்கப் பட்டுள்ள புகாரை மதிப்பதாகவும் அதேவேளை விருது வழங்குவதை திரும்பப் பெற முடியாது என்றும் பில்கேட்ஸ் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...