பரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு!

செப்டம்பர் 18, 2019 506

புதுடெல்லி (18 செப் 2019): காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் 5-ந் தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சித்தலைவருமான பரூக் அப்துல்லா (வயது 81) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தற்போது அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளார்.

பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...