ஜாகிர் நாயக் குறித்த மஹாதீர் முஹம்மதுவின் கூற்றுக்கு இந்தியா மறுப்பு!

செப்டம்பர் 18, 2019 464

புதுடெல்லி (18 செப் 2019): ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க வேண்டி இந்திய பிரதமர் மோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மது கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 5-ஆம் தேதி விளாடிவோஸ்டோக்கில் நரேந்திர மோடியுடன் மஹாதீர் சந்தித்தபோது பிரதமர் மோடி ஜாகீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டவில்லை என்று மஹாதீர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அப்போது இந்த விவகாரம் எழுப்பப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் தெரிவித்தார். மேலும் கடந்த ஜனவரி மாதம் ஜாகிரை மலேசியாவிலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்க இந்தியா கோரியுள்ளதாக அவர் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...