நான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? - மாணவி கேள்வி!

செப்டம்பர் 18, 2019 550

புதுடெல்லி (18 செப் 2019): என்னை வன்புணர்ந்த சாமியார் சின்மயானந்த் மீது எப்போது உபி அரசு நடவடிக்கை எடுக்கும்? என்று பாதிக்கப் பட்ட சட்டக்கல்லூரி மாணவி கேள்வி எழுப்பியுள்ளார்.

வாஜ்பாய் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவர் சாமியார் சின்மயானந்த். 73 வயதான இவர் பல ஆசிரமங்களையும் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவர் மீது அவர் நடத்தும் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

பாலியல் தொல்லை குறித்து அந்தப் பெண்ணின் தந்தை போலீஸில் புகார் கொடுத்திருந்தார். சின்மயானந்தும் மேலும் சிலரும் தனது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் பகிரங்கமாக புகாரளித்திருந்தார்.

இதுகுறித்து அந்த பெண் செய்தியாளர்களிடம் கூறும்போது, சின்மயானந்த் என்னை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தினார். அதன்பிறகும் கூட ஒருவருடமாக தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். சிறப்பு புலனாய்வுக் குழு என்னிடம் பல மணி நேரம் விசாரித்தனர். அப்போது சின்மயானந்த் குறித்தும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தேன். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இனியும் உபி அரசு சாமியார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் என் வாழ்வை முடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. அப்போதுதான் நடவடிக்கை எடுப்பீர்கள் என்றால் அதற்கு தயாராகவே உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...