இந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி!

செப்டம்பர் 19, 2019 261

புதுடெல்லி (19 செப் 2019): நாடெங்கும் ஒரே மொழி என்ற கருத்திலிருந்து பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா பின்வாங்கியுள்ளார்.

“நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்திமொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி” என அமீத் ஷா கூறிய கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமித்ஷாவின் கருத்துக்கு அனைத்து எதிர் கட்சிகளும்கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. சமூக வலைதளங்களிலும் பலர் அமித் ஷாவுக்கு எதிராகவும் பாஜக அரசுக்கு எதிராகவும் போர்க்கொடி உயர்த்தினர்.

இந்நிலையில், அமித்ஷா தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார். "எனது கருத்து தவறாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது. மாநில மொழிகளுக்குப் பிறகு இரண்டாவது மொழியாக இந்தியை கற்க வேண்டும் என்றே கூறினேன். நானும் இந்தி பேசாத மாநிலத்திலிருந்துதான் வருகிறேன். நான் இந்திய மொழிகளை வலிமைப்படுத்த வேண்டும் என்றுதான் கூறினேன்." என பல்டி அடித்துள்ளார் அமித்ஷா.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...