பெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய் சிங் தாக்கு!

செப்டம்பர் 19, 2019 290

புதுடெல்லி (19 செப் 2019): இந்தியாவில் பெண்களுகு ஆபத்தே காவி உடை அணிந்திருப்பவர்களால்தான் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சாமியார்களில் சிலர் நல்லவர்களும் உள்ளனர். அதேவேளை பெண்களை ஆன்மீகம் என்ற பெயரால் பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் குறித்தும் அன்றாடம் கேள்வியுற்று வருகிறோம்.

சமீபத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வதாக சட்டக்கல்லூரி மாணவி வீடியோ மூலம் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சுவாமி சின்மயானந்த் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தால் பாஜகவினர் மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் சின்மயானந்துக்கு எதிராக அரசியல் கட்சியினர், பெண்கள் அமைப்பினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், காவி உடை அணிந்தவர்கள், கோயில்களுக்கு உள்ளேயே பாலியல் வல்லுறவுச் செயல்களை அரங்கேற்றுவதாகவும், இதனால் இந்து மதத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் மறைமுகமாக சாடியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “முன்பெல்லாம் ஒரு நபர் தனது குடும்பத்தைவிட்டு பிரிந்ததும் துறவியாக மாறி ஆன்மிகப் பாதைக்கு திரும்புவார். ஆனால் , காவி உடையில் இருப்பவர்களே பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் நிகழ்வில் ஈடுபடுகின்றனர். பாலியல் வன்கொடுமைகள் கோயில்களிலேயே நடைபெறுகின்றன. இந்து தர்மத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் இவர்களை கடவுள் கூட மன்னிக்க மாட்டார். காவி உடையில் இருப்பவர்களலேயே பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” என்று திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...