என் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்!

செப்டம்பர் 19, 2019 331

அஹமதாபாத் (19 செப் 2019): தலை பெரிதாக இருப்பதால் ஹெல்மேட் போட முடியாது என்று ஒருவர் கூறியதால் போலீசார் அவருக்கு ஹெல்மேட் போடுவதில் விலக்கு அளித்துள்ளனர்.

வாகன திருத்தச் சட்டத்தின்படி, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு பலமடங்கு அபராதம் விதித்துள்ளது.

இந்த நிலையில், குஜராத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஜாகிர் மாமோன் என்பவரை, போக்குவரத்து போலீஸார் சாலையில் பிடித்தனர். ஏன் ஹெல்மெட் அணியவில்லை என ஜாகித்திடம் போலீஸார் கேட்டுள்ளனர்.

அதற்கு, ஜாகிர், எனது தலை பெரிதாக உள்ளதால், எந்த ஹெல்மெட்டும் தலைக்குள் செல்லவில்லை. அதனால் ஹெல்மெட் அணியவில்லை என கூறியுள்ளார். அவர் சொன்ன பதிலை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவருக்கு அபராதம் விதிக்காமல் அவரை அனுப்பி வைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...