முஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - கர்ப்பம் கலைந்த பரிதாபம்!

செப்டம்பர் 19, 2019 809

கவுஹாத்தி (19 செப் 2019): அஸ்ஸாமில் விசாரணை என்ற பெயரில் முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் போலீஸ் தாக்குதல் நடத்தியதை அடுத்து கர்ப்பம் கலைந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் டர்ராங் மாவட்டத்தில் முஸ்லிம் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது இரண்டு சகோதரிகளை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார் அவர்களின் ஆடைகளை களைந்து அத்துமீறி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பெண்களின் சகோதரர் மீதான வழக்கு விசாரணைக்காக இவர்களை அழைத்துச் சென்ற போலீசார் இவ்வாறு கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளன. அதில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலும் தக்குதல் நடத்தியதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு குழந்தை கலைந்துள்ளது..

இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார் மேலும் மாவட்ட டிஐஜியின் உத்தரவின் பேரில், தாக்குதல் நடத்திய எஸ் ஐ மற்றும் பெண் போலீஸ் அதிகாரி உள்ளிட்டவர்களை பணி இடை நீக்கம் செய்ததோடு, அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...