புர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வழங்க மறுப்பு!

செப்டம்பர் 19, 2019 764

ராஞ்சி (19 செப் 2019): ஜார்கண்டில் முஸ்லிம் மாணவி புர்கா அணிந்து பட்டம் பெற வந்ததால் அவருக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வழங்க மறுத்துவிட்டது.

ராஞ்சியில் உள்ள மர்வாரி கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த மாணவி நிஷாத் ஃபாத்திமா என்ற மாணவிக்கு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அவருக்கு பட்டம் வழங்க பெயர் அறிவிக்கப் பட்டது. அப்போது அவர் மேடைக்கு புர்காவுடன் வந்தார். அப்போது அவருக்கு பதக்கம் வழங்கப் பட்டது.

எனினும் அவருக்கு பட்டம் வழங்க கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும் அவர் கல்லூரி விதிமுறைக்கு புறம்பாக ட்ரெஸ் கோட் அணியாமல் படடம் பெற வந்ததால் அவருக்கு பட்டம் வழங்கப் பட மாட்டாது என்று அறிவிப்பு வெளியானது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தெரிவித்த அந்த மாணவி "கல்லூரி நிர்வாகம் ஏற்கனவே ட்ரெஸ் ட்ரெஸ் கோட் அணிந்து பட்டம் பெற வரவேண்டும் என்று அறிவித்திருந்தது. எனினும் எங்கள் பாரம்பர்ய புர்காவை பொது இடத்தில் என்னால் கழட்ட இயலாது." என்று தெரிவித்தார்.

சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்குள் புர்காவுடன் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...