பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் திருட்டு!

செப்டம்பர் 20, 2019 303

கொச்சி (20 செப் 2019): விக்ராந்திலிருந்து மின்னணு பொருட்கள் திருட்டு போன சம்பவம் பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவில் உருவாக்கப்பட்டுவரும் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கட்டப்பட்டு வரும் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலைப் பற்றிய மிக முக்கிய விஷயங்கள் அனைத்தும் அந்த கருவிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால், அவை திருடப் பட்டுள்ள விவகாரம் பேரதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட செயல் திட்டத்தை சோதித்துப் பார்த்த போது அது இயங்காததால், கப்பலில் சோதனை செய்த போதுதான், கணினிகள் திருடுப் போன விஷயமே அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.

ஒரு முக்கியமான கம்ப்யூட்டர், 10 ஹார்ட் டிஸ்குகள், 3 சிபியு ஆகியவை விக்ராந்த் கப்பலில் இருந்து திருடு போய் மூன்று வாரம் ஆகியும் இந்த திருட்டு குறித்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து பல வகைகளில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...