உலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா!

செப்டம்பர் 21, 2019 295

நியூயார்க் (21 செப் 2019): போலிச் செய்திகளை பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மைக்க்ரோ சாஃப்ட் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.

சராசரியாக உலக அளவில் 64 சதவீதம் இந்தியா போலி செய்திகளை பரப்பி வருகின்றன, என்றும் அவை சமூக வலைதளங்களின் வாயிலாக அதிகம் பரப்பப் படுவதாகவும் அந்த சர்வே தெரிவிக்கின்றது. உலகில் மற்ற நடுகள் மொத்தமாக 57 சதவீதமே போலி செய்திகளை பரப்பி வருகின்றன.

மேலும் இதுபோன்ற போலி செய்திகளால் 40க்கும் அதிகமானோர் சென்ற ஆண்டு இந்தியாவில் கொல்லப் பட்டதாகவும் அந்த சர்வேயில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஃபார்வேர்டு செய்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் அப் நிறுவனம் பல யுக்திகளை கையாண்ட போதிலும் போலி செய்திகள் பரப்புவதை தடுக்க முடியாதது வேதனை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...