சாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்!

செப்டம்பர் 21, 2019 409

ஓசூர் (21 செப் 2019): ஒசூரில் செயல்படும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறுத்தொழில் நிறுவனங்கள் 80 சதவீதம் உற்பத்தியை நிறுத்தி கொண்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

ஒசூர் கனிமவளம் நிறைந்த பகுதி. இங்கு குண்டு ஊசி முதல் விமான உதிரி பாகங்கள் வரை அனைத்து வகையிலான தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளை நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. அதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக அசோக் லைலேண்ட், டிவிஎஸ் போன்ற மிகப்பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தியை குறைந்துள்ளன. இது, ஒசூரில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களை நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...