அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

செப்டம்பர் 22, 2019 376

நியூயார்க் (22 செப் 2019): அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, 7 நாள் பயணமாக செப்.21-ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். செப்.21-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையிலான இந்தப் பயணத்தின் போது, ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் நடத்தும் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கிறார். நிகழ்ச்சியின் இடையே, இருநாடுகளுக்கிடையேயுள்ள உறவுகள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

அதையடுத்து வரும் 24-ஆம் தேதி நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி குறித்த சிறப்பு நிகழ்ச்சியை மோடி நடத்துகிறார். இறுதியாக, ஐ.நா. பொதுச் சபையில் வரும் 27-ஆம் தேதி காலை உரையாற்றிய பின்னர் அன்றைக்கு மதியம் அங்கிருந்து நாடு திரும்புகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...