கல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

செப்டம்பர் 22, 2019 656

திருவனந்தபுரம் (22 செப் 2019): கல்லூரி விடுதியில் மொபைல் போன் மற்றும் இணையம் உபயோகிப்பதற்கு விதிக்கப் பட்ட தடையை நீக்கக் கோரி மாணவி ஃபஹீமா ஷிரீன் தொடர்ந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் மாணவிக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு, ஶ்ரீ நாராயணா குரு கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் பயிலும் மாணவி ஃபஹீமா ஷிரீன். இவர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகிறார்.

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மொபைல் போன் மற்றும் இணையதளங்களை உபயோகிக்க தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இந்த தடையை நீக்க வேண்டும் எனவும், மொபைல் மற்றும் இணையங்கள் பாடம் பயிலுபவர்களுக்கு பல தேவைகளை பூர்த்தி செய்வதாகவும், அதில் உள்ள தவறானவைகளை மட்டும் கருத்தில் கொண்டு தடை விதிப்பது ஏற்புடையதல்ல என்று கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மாணவி ஃபஹீமாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...