மாட்டுக்கறிக்காக மற்றும் ஒரு படுகொலை!

செப்டம்பர் 24, 2019 385

ராஞ்சி (24 செப் 2019): ஜார்கண்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மாட்டுக்கறியை காரணம் கூறி வட மாநிலங்களில் அவ்வப்போது தாக்குதல்களும், படுகொலைகள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் கவுத்தி மாவட்டத்தில் கலந்தூஸ் பர்லா மற்றும் ஃபாகு கச்சாப், பிலிப் ஹாரோ ஆகியோர் மாட்டுக்கறி வைத்திருந்ததாக, பசு பயங்கரவாத கும்பல் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பர்லா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயங்களுடம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த தாக்குதலின் பின்னணியில் பஜ்ரங்க் தள் அமைப்பு உள்ளதாக பாதிக்கப் பட்டவரின் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...