சத்தீஸ்கர் குண்டு வெடிப்பில் மூன்று பேர் பலி!

செப்டம்பர் 24, 2019 213

சத்தீஸ்கர் (24 செப் 2019): சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

சதீஸ்கர் மாநிலத்தில் காஸ்ரண்டா – துமாபால் ஆகிய கிராமங்களுக்கு இடையில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த பணிக்காக டீசல் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்றும் பயன் படுத்தப்பட்டுள்ளது.

இந்த லாரியில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் பயணித்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழநதுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...