பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

செப்டம்பர் 24, 2019 343

லாகூர் (24 செப் 2019): பாகிஸ்தானில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவிலும் உணரப்பட்டது.

பாகிஸ்தான் லாகூரில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் கூறுகையில் பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகருக்கு வடகிழக்கே 173 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 6.1-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 10 கிமீ. இந்த நிலநடுக்கம் 8 முதல் 10 நொடிகள்வரை நீடித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும், பல நகரங்களில் கட்டிடங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல டெல்லியில் மாலை சரியாக 4.35-க்கு சில விநாடிகள் வரை இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. வட மாநிலங்களான பஞ்சாப், உத்தரகாண்ட், காஷ்மீர் மாநில மக்களும் நில அதிர்வை உணர்ந்துள்ளனர். இந்த நில நடுக்கமானது வட மாநில மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பஞ்சாப், ராஜஸ்தானிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது

பாகிஸ்தானை பொருத்தளவில் இஸ்லாமாபாத், பெஷாவர், ராவல்பிண்டி, ஆகிய நகரங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...