தொடரும் கும்பல் தாக்குதல்கள் - தலித் சிறுவர்கள் அடித்துக் கொலை!

செப்டம்பர் 25, 2019 500

போபால் (25 செப் 2019): மத்திய பிரதேசத்தில் தலித் சிறுவர்கள் இருவர் அடித்துக் கொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கும்பல் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலரின் மீது கடும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்திலுள்ள பாவ்கேதி கிராமத்தைச் சேர்ந்த ரோஷானி என்ற 12 வயது சிறுவனும், அவினாஷ் என்ற 10 வயது சிறுவனும், கிராம பஞ்சாயத்துக்கு அலுவலகத்துக்கு அருகில் மலம் கழித்துள்ளனர். அதனால், அவர்கள் இருவரையும் ஒரு கும்பல் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளது. மயங்கிவிழுந்த அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில், இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். சிறுவர்கள் மரணத்துக்கு காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒருபுறம் மாட்டுக்கறிக்காக படுகொலைகள் தொடரும் நிலையில் மறுபுறம் தலித்துகள் மீதான தாக்குதல்களும் தொடர்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...