மோடிக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்!

செப்டம்பர் 29, 2019 483

நியூயார்க் (29 செப் 2019): மோடிக்கு எதிராக ஐ.நா தலைமையகம் முன்பாக ஆயிரக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐநா சபையில் பிரதமர் மோடி உரையாற்றியபோது தெற்காசிய நாடுகள் அமைப்பினர் இந்த போராடத்தை நடத்தினர்.

இந்தியாவில் காஷ்மீரில் நடைபெறும் அத்து மீறல்கள், முஸ்லிம்கள், தலித்துகளுக்கு எதிரான கும்பல் தாக்குதல்கள், விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் ஆகியவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று பதாகைகளை ஏந்தை இந்த போராட்டம் நடைபெற்றது. 

அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி சனிக்கிழமை நாடு திரும்பினார். 

முன்னதாக அமெரிக்க வாழ் காஷ்மீரிகள் சிலர் மோடி அரசால் காஷ்மீரிகள் துன்புறுத்தப் படுவதாகஅளித்த புகாரின் அடிப்படையில் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...