அதிக இந்திய இளைஞர்களின் மரணத்திற்கு காரணம் இதுதான் - அதிர வைக்கும் ஆய்வு தகவல்!

செப்டம்பர் 29, 2019 378

புதுடெல்லி (29 செப் 2019): முறையான வாழ்க்கை முறையை கடை பிடிக்காததால் இந்திய இளைஞர்கள் 30 வயதிலேயே இறப்பை சந்திப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய இளைஞர்கள் உலகின் வருங்கால தூண்கள் என்று போற்றிக் கொண்டு இருக்கிறோம். உலக நாடுகளில் இந்திய இளைஞர்களின் உழைப்புக்கு நல்ல மரியாதை உள்ளது. இந்நிலையில் ஹெல்தியன்ஸ் என்ற இந்தியாவின் புகழ் பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

அந்த ஆய்வில், இந்தியாவில் தவறான வாழ்க்கை முறை பழக்கங்களினால் 30 முதல் 44 வயது உடைய பெரும்பாலனோர் இறப்பை சந்திக்கின்றனர் என்றும், குறிப்பாக, உடலில் கொழுப்பு சேர்த்தல், உடல் பருமன் மற்றும் இதய நோய் போன்ற லைஃப் ஸ்டைல் தொடர்புடைய நோய்களால் இறப்பதாகவும் கூறுகின்றனர்.

அதேபோல், 50 முதல் 59 வயதிற்கு உட்பட்ட பெண்கள் இதுபோன்ற நோய்களை அவர்களும் சந்திப்பதாக கூறுகின்றனர். தற்போது 4 லட்சம் நோயாளிகளில் 2.25 லட்சம் பேர் ஆண்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் என்றும், அதில் 1.75 சதவீதமான பெண்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த சிக்கல் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தை உண்டாக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலும், உலக சுகாதாரத்துறை அமைச்சகத்தில் தகவல் படி, உலகம் முழுவதும் 60 சதவீதம் இறப்பு நடைபெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 44 சதவீதமானவர்கள் இளம் வயதுள்ள இளைஞர்கள் என்றும் குறிப்பிட்டுகிறது. அந்த இறப்புகளுக்கு பெரும்பான்மையான காரணம் இந்த தவறான வாழ்க்கை முறை பழக்கங்களே என்றும் நிரூபணமாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...