உத்திர பிரதேச இடைத்தேர்தலில் அசாம் கான் மனைவி போட்டி!

செப்டம்பர் 29, 2019 238

லக்னோ (29 செப் 2019): உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை சட்ட சபை இடைத்தேர்தலில் ராம்பூர் தொகுதியில் அசாம்கான் மனைவி தசீன் பாத்திமா போட்டியிடவுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட சமாஜ்வாதி கட்சி தீர்மானித்தது.

9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் ராம்பூர் சட்டசபை தொகுதியில் அசம் கானின் மனைவி தசீன் பாத்திமா போட்டியிடுவார் என சமாஜ்வாதி கட்சி இன்று அறிவித்துள்ளது.

இதே ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக அசம் கான் 9 முறை பதவி வகித்தவர் என்பதும் முன்னாள் அமைச்சராக அசாம்கான் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...