இந்தியாவின் நடவடிக்கை தவறானது - ஐ.நாவில் மகாதீர் உரை!

செப்டம்பர் 30, 2019 372

நியூயார்க் (30 செப் 2019): ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74-வது பொதுப் பேரவையில் உரையாற்றிய துன் மகாதீர், ஜம்மு, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார்.

அப்போது பேசிய மகாதீர், ஐநாவின் தீர்மானம் இருந்த போதும் ஜம்மு காஷ்மீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறிய மகாதீர், இதற்கு காரணங்கள் இருக்கலாம் ஆனால் அந்த நடவடிக்கை தவறானது என்று வலியுறுத்தினார். அமைதியான வழிமுறைகளின் மூலம் இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்றும் மகாதீர் கேட்டுக் கொண்டார்.

இந்தியா இந்தப் பிரச்சனையில் பாகிஸ்தானோடு இணைந்து காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க முன்வரவேண்டும் என்றும் மகாதீர் கேட்டுக் கொண்டார். ஐநாவின் கோரிக்கைகளை புறக்கணிப்பது சட்டநீதியைப் புறக்கணிப்பதற்கும் ஐநாவின் மற்ற கோரிக்கைகளையும் நிராகரிப்பதற்கும் இட்டுச் செல்லும் என மகாதீர் எச்சரித்தார்.

ஆனால் ஐநா பொதுப் பேரவையில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது உரையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எதனையும் பேசவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...