நான் விரும்பியே மதம் மாறினேன் - வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த இளம் பெண்!

செப்டம்பர் 30, 2019 744

அபுதாபி (30 செப் 2019); நான் யாரின் வற்புறுத்தலிலும் மதம் மாறவில்லை, என் விருப்பத்திலேயே இஸ்லாம் மதத்திற்கு மாறினேன் என்று கேரள கிறிஸ்தவ இளம் பெண் தெரிவித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அபுதாபி சென்ற நிலையில் அந்த பெண் லவ் ஜிஹாத் முறையில் மன மாற்றம் செய்யப் பட்டதாக பொய் தகவல் வெளியானது.

இதனை மறுத்துள்ள அந்த பெண், " என்னை யாரும் கடத்தவில்லை அது முற்றிலும் தவறான செய்தி. அபுதாபியில் வசிக்கும் இந்தியர் ஒருவருடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் எனக்கு சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நான் அவரை திருமணம் செய்து கொண்டு அபுதாபியிலேயே வாழ விரும்பினேன். அதனால் கேரளாவில் இருந்து அபுதாபிக்கு வந்துள்ளேன்.

மேலும், எனது விருப்பத்தின்படி கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாமிற்கு மதம் மாறி விட்டேன். சியானி பென்னி என்ற எனது பெயரை ஆயிஷா என பெயர் மாற்றம் செய்து விட்டேன். இதை கடந்த 24-ம் தேதி அபுதாபி நீதிமன்றத்தில் வாக்குமூலமாக பதிவு செய்திருக்கிறேன்.

என்னை மதம்மாற யாரும் வற்புறுத்தவில்லை, எனது சொந்த விருப்பத்தினாலேயே இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். இதனை இந்திய தூதரகத்திலும் தெரிவித்துள்ளேன்." என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...