பீகார் வெள்ளத்தில் சிக்கிய துணை முதல்வர் - 29 பேர் பலி!

அக்டோபர் 01, 2019 306

பாட்னா (01 அக் 2019): பீகார் மழை வெள்ளத்தில் சிக்கிய துணை முதல்வரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அவரை படகு மூலம் மீட்டனர்.

பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை பொதுமக்களில் 29 பேர் பலியாகி உள்ளனர் என்று பீகார் பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது. வெள்ளம் பாதித்த மக்களுக்கு தேவையான உணவு பொட்டலங்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்று வழங்குவதற்காக 2 ஹெலிகாப்டர்களை உதவிக்கு அனுப்பி வைக்கும்படி இந்திய விமான படையிடம் பீகார் அரசு கேட்டு கொண்டுள்ளது.

பீகாரில் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. வீடுகள், கட்டிடங்களை சுற்றி நீர் தேங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள நீரானது இடுப்பளவு வரை சூழ்ந்துள்ளது. பேரிடர் மேலாண் கழக குழுவினர் படகுகளில் சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு பலரை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவிலும் பலத்த சேதத்தை மழை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் சுசீல்குமார் மோடி வசித்த வீட்டை சுற்றிலும் மழை நீர் சூழ்ந்தது. வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் படகில் சென்று சுசீல்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு பத்திரமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...