தமிழகத்தில் மட்டுமல்ல மேற்கு வங்கத்திலும் அனல் பறக்கிறது!

அக்டோபர் 01, 2019 586

கொல்கத்தா (01 அக் 2019): மேற்கு வங்கத்தில் gobackamitshah என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவிற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் காந்தி இந்து-இஸ்லாம் மக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தியதாக பேசியுள்ளார்.

மேலும் திரிணாமூல் காங்கிரஸ் வந்தேறிகளை உள்ளே நுழைய அனுமதித்து விட்டதாகவும், தேசிய அளவிலான கணக்கெடுப்புகள் மூலம் உண்மையான குடிமக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் எனவும் அவர் பேசியுள்ளார். இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் மற்றும் மக்கள் கோ பேக் அமித்ஷா என்ற ஹேஷ்டேகை பிரபலப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மோடியோ அமித்ஷாவோ வந்தால் கோபேக் மோடி, கோபேக அமித்ஷா என ட்ரெண்டாவதுபோல் மேற்கு வங்கத்திலும் ட்ரெண்டாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...