மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

அக்டோபர் 02, 2019 324

புதுடெல்லி (02 அக் 2019): மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தில் பிரதமர் மோடி சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ராஜ் கட் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோன்று முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி விஜய் கட் பகுதியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் அவரது மகன் அனில் சாஸ்திரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...