இஸ்ரோ விஞ்ஞானி படுகொலை!

அக்டோபர் 02, 2019 322

ஐதராபாத் (02 அக் 2019): இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ். அவரது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப் பட்டு கிடந்துள்ளார்.

இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் சென்டர் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர் சுரேஷ். கேரளாவைச் சேர்ந்த இவர், ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டை அன்னப்பூர்ணா குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

ஐதராபாத் அண்ணபூர்னா குடியிருப்பில் தனியாக தங்கியிருக்கும் சுரேஷ் சமீபத்தில் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உடன் பணிபுரிபவர்கள் சுரேஷின் தொலைபேசிக்கு அழைத்துள்ளனர். ஆனால் அதனை அவர் எடுக்கவில்லை.

இதையடுத்து சென்னையில் இருக்கும்அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அதே குடியிருப்பில் வசிக்கும் உறவினர்களிடம் தகவல் கூறப்பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட குடியிருப்பை ஆய்வு செய்தனர். . இந்நிலையில் விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதில் சுரேஷ் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட்டது

இதையடுத்து தடயவியல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...