ஐதராபாத் நிஜாமின் பணம் இந்தியாவுக்கு சொந்தம் - லண்டன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

அக்டோபர் 03, 2019 395

லண்டன் (03 அக் 2019): ஐதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் இந்தியாவுக்கே சொந்தம் என்று லண்டன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தான் பிரிவினையின் போது தனி சமஸ்தானமாக இருந்த ஐதராபாத், இந்தியாவுடன் இணைய மறுத்தது. இதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தரப்பிலிருந்து நிஜாமுக்கு ஆயுத உதவி செய்ததற்கு, 1948-ம் ஆண்டு ஐதராபாத் நிஜாமின் பல கோடி ரூபாய் பணம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்த பாக். துாதர் ஹபிப் இப்ராகிம் ரஹிம்துலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அப்பணம் பாக். துாதர் பெயரில் லண்டனில் உள்ள நெட் வெஸ்ட் வங்கி கணக்கில் 'டெபாசிட்' செய்யப்பட்டது.

பணத்தை பாகிஸ்தான் திருப்பி தர மறுத்ததை அடுத்து, இருநாடுகளுக்கும் இடையே லண்டன் உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பில், நெட் வெஸ்ட் வங்கியில் உள்ள 350 கோடிக்கும் ரூபாய்க்கு அதிகமான பணத்திற்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாட முடியாது என்றும், இந்தியாவுக்கும், ஏழாவது நிஜாமின் பேரன்களுக்கும் பணம் சொந்தம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...