கொடூர கொலையாளியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

அக்டோபர் 03, 2019 291

புதுடெல்லி (03 அக் 2019): மனைவி மற்றும் 4 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தூக்குத் தண்டனை குற்றவாளியின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 2007-ம் ஆண்டு தனது மனைவி மற்றும் 10 மாத கைக்குழந்தை, 4,6,10 வயதுடைய 3 குழந்தைகள் என 4 குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு கடந்த 2011-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை மும்பை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறு பரிசீலனை செய்யக்கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் மறுஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வாலிபர் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரமணா, சந்தனகவுடர், இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய ‘பெஞ்ச்’ முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கு காரணமாக நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் பிழைகள் இருப்பதாக குறிப்பிட்டனர். வழக்கின் அனைத்து ஆதாரங்களையும் மறுபரிசீலனை செய்ததில் முந்தைய தீர்ப்பில் 2 பிழைகள் செய்திருப்பதாக கூறினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...