திரைப்படம் பார்த்த போலீசார் பணியிடை நீக்கம்!

அக்டோபர் 03, 2019 268

ஐதராபாத் (03 அக் 2019): சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படம் பார்த்த ஏழு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிரஞ்சீவி நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பின் வெளியான சரித்திர படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. சிரஞ்சீவியின் 151-வது படமான இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று வெளியானது.

இந்நிலையில் கோலிமிகுண்டா பகுதியைச் சேர்ந்த பந்தி ஆத்மகுர், கர்னூல் பகுதியைச் சேர்ந்த ரச்சர்லா, கோஸ்பேடு உள்ளிட்ட 7 போலீசார் தங்களது பணிநேரத்தில் தியேட்டருக்குச் சென்று முதல் நாள் முதல்காட்சியைக் கண்டுகளித்துள்ளனர். போதாதற்கு இவர்கள் திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் திரைப்படம் பாரத்துவிட்டு அதை வீடியோவாகவும் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த கர்னூல் எஸ்.பி.கீரப்பா இந்த 7 பேரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...