ப.சிதம்பரத்தின் மீதான ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு!

அக்டோபர் 04, 2019 233

புதுடெல்லி (04 அக் 2019): முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க, டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் முன்பு இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட, நீதிபதிகள், ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 15ஆம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...