டிக்டாக் கவர்ச்சி நடிகைக்கு பாஜகவில் சீட்!

அக்டோபர் 04, 2019 369

சண்டீகர் (04 அக் 2019): டிக் டாக்கில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து டப் ஸ்மாஷ் செய்யும் நடிகைக்கு அரியானா சட்டசபை தேர்தலில் பாஜக சீட் வழங்கியுள்ளது.

நடிகை சோனாலி பொகத். சினிமா மற்றும் சில டிவி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் டிக்டாக்கில் கவர்ச்சி காட்டி நடிப்பதால் அவருக்கு நிறைய ரசிகர்களும் உள்ளனர். .

உடனே அந்த நடிகையை பயன்படுத்திக்கொள்ள பாஜக முடிவு செய்தது. உடனடியாக சோனாலிக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் ஒதுக்கி உள்ளது. பாஜக சார்பில் ஹரியானாவில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார் சோனாலி.

அரியானாவில் வரும் 21ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...