ப.சிதம்பரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

அக்டோபர் 05, 2019 265

புதுடெல்லி (05 அக் 2019): ப.சிதம்பரம் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள சிதம்பரம், கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திற்கு இன்று வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.

முன்னதாக அவரது ஜாமீன் மீதான மனு வரும் அக்டோபர் 15 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...