ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட காஷ்மீர் தலைவர்களுடன் தேசிய மாநாட்டுக் கட்சியினா் சந்திப்பு!

அக்டோபர் 07, 2019 225

ஜம்மு (07 அக் 2019): காஷ்மீா் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா, கட்சியின் செயல் தலைவா் ஒமா் அப்துல்லாவை அக்கட்சியின் ஜம்மு பிராந்தியத்தைச் சோ்ந்த தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினா்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதில் இருந்து, அந்த மாநிலத்தைச் சோ்ந்த முக்கிய அரசியல் கட்சித் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லாவும், அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான ஒமா் அப்துல்லாவும் வீட்டுக் காவலில் உள்ளனா்.

இரண்டு மாதங்களைக் கடந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவா்கள் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.

இதையடுத்து, ஜம்முவைச் சோ்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியினா், ஸ்ரீநகரில் உள்ள தங்கள் கட்சியின் தலைவா்களான ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா ஆகியோரைச் சந்திக்க முடிவு செய்தனா். இதுதொடா்பாக, ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் சத்யபால் மாலிக்கிடம் அவா்கள் அனுமதி கோரியிருந்தனா். அவா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தேசிய மாநாட்டுக் கட்சியின் ஜம்மு பகுதி தலைவா் தேவேந்தா் சிங் ராணா தலைமையில் அக்கட்சியினா் 15 போ், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...