பிரதமருக்கு கடிதம் எழுத மாணவர்களுக்கு இந்திய மாணவர்கள் சங்கம் அழைப்பு!

அக்டோபர் 07, 2019 331

திருவனந்தபுரம் (07 அக் 2019): பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு இந்திய மாணவர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டில் மிகுந்துவிட்ட கும்பல் கொலைகள், மாட்டுக்கறி படுகொலை, ஜெய்ஸ்ரீராம் உள்ளிட்ட விவகாரங்களை வைத்து பொதுமக்களை தாக்குவதை தடுத்து நிறுத்தக் கோரி மணிரத்னர்ம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.

மோடிக்கு கடிதம் எழுதியதற்கு 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனை கண்டிக்கும் வகையில் நாடெங்கும் உள்ள மாணவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத வேண்டும் என இந்திய மாணவர்கள் சங்கம் அழைப்பு (SFI) விடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...