காஷ்மீர் விவகாரத்தில் சீனா முக்கிய மன மாற்றம்!

அக்டோபர் 08, 2019 667

புதுடெல்லி (08 அக் 2019): சீனா அதிபர் ஷி ஜின்பிங் விரைவில் இந்தியா வரவுள்ள நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது சீனா.

சீனா அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளார்கள். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக, ராஜாங்க ரீதியான உறவுகள் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இதற்கிடையே சீனா அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீனாவின் பெய்ஜிங் நகருக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளே காஷ்மீர் விஷயத்தில் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதுவே சீனாவின் நிலைப்பாடு என்றும் ஜெங் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...